நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு
புதிய இணைப்பு
இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டருக்கு 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 368 ரூபாவாகும்.
95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.
ஒட்டோ டீசல் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 333 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுப்பர் டீசல் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.
இதேவேளை, மண்ணெண்ணெய் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 215 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம்.
விலை திருத்தம்
மேலும், இதன்போது எரிபொருளின் விலை குறைக்கப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அளவில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுதியில் பாரிய உயர்வு பதிவாகியிருந்த நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு எரிபொருளின் விலை குறைக்கப்பட்டது.
இந்தநிலையில், ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்து வரும் நிலையில் இந்த மாதமும் எரிபொருளின் விலையில் மக்களுக்கு சாதகமான திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், உலக சந்தையில் எரிபொருளின் விலையில் ஏற்படும் மாற்றங்களையும் கருத்திற் கொண்டு இந்த விலைத் திருத்தம் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
You may like this