வெற்றிலைக்கேணியில் கடற்றொழிலாளர்கள் இடையே முறுகல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வடமராட்சி கிழக்கு-வெற்றிலைக்கேணியில் கடற்றொழிலாளர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது, நேற்றையதினம் (03.03.2024) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.
வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைய அந்த கடல் பகுதியில் உழவு
இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு கரைவலை தொழில் சங்கத்தினால் தடை
விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருடன் முறுகல்
எனினும், தொடர்ச்சியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்துவருவதால் நேற்று காலை கரைவலை வாடி கடற்றொழிலாளர்களினால் அந்த பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, சம்பவ இடத்தில் அதிகளவான கடற்றொழிலாளர்கள் ஒன்று கூடியதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிஸாருடனும் கடற்றொழிலாளர்கள் முறுகலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்தாவிடின், எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri