தென்னிலங்கையை உலுக்கிய கோரம்: கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி
காலி, கரந்தெனிய பிரதேசத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருபாபில பிரதேசத்தில் இன்று அதிகாலை இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவன் குமார என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மனைவி தனது கணவரின் கழுத்து பகுதியில் கத்தியால் தாக்கியதாகவும், தாக்குதலுக்குள்ளானவர் வீட்டில் இருந்து வெளியே வந்த வீட்டருகே இறந்து கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தியுடன் மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்பதியினருக்கு இடையில் அடிக்கடி ஏற்பட்ட தகராறு தொடர்பில் கரந்தெனிய பொலிஸாருக்கும் பல சந்தர்ப்பங்களில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam