நாட்டில் மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடு
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மீண்டும் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினத்துக்குள் சுமார் 70 ஆயிரம் மெட்ரிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்த்திருந்த போதும் இதுவரை 26 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது
அரிசி இறக்குமதிக்கான கால எல்லை
அத்துடன் உள்நாட்டு அரிசி உற்பத்தியாளர்களும் போதுமான அளவில் நாட்டரிசியை சந்தைப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாக இல்லை.
இதன் காரணமாக சம்பா, கீரி சம்பா தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே நேற்றைய தினம் முடிவடைய இருந்த அரிசி இறக்குமதிக்கான கால எல்லையை அரசாங்கம் மீண்டும் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
