விவசாயிகளுக்கு கடன் தர மறுக்கும் இலங்கையின் வங்கிகள்
நெல் விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்க மறுப்பதாகவும், சந்தையில் செயற்கையான கீரிசம்பா தட்டுப்பாட்டை உருவாக்க சிலர் முயற்சிப்பதாகவும் பெரும் போக விவசாய வாரியத்தின் தலைவர் புஞ்சிரால ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படப் போவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்த கருத்துத் தொடர்பில் ஊடகங்களிடம் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
செயற்கைத் தட்டுப்பாடு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கீரிசம்பாவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படப் போவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்திருந்தார். அதற்காக கீரிசம்பா அரிசியை இறக்குமதி செய்யப்போவதாகவும் கூறியிருந்தார்.
பொலன்னறுவை பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களிடம் 80,000 ஆயிரம் மெற்றிக் தொன் கீரிசம்பா நெல் இருக்கிறது. பொலன்னறுவை பாரிய ஆலை உரிமையாளர்களிடம் இருக்கும் கீரிசம்பா நெல்லைக் குற்றி சந்தைக்கு விடமுடியாதா? அரசாங்கம் எதற்காக இருக்கிறது, பாரிய ஆலை உரிமையாளர்களுக்கு அரசாங்கம் அஞ்சுவதாகவே தோன்றுகிறது.
குறித்த 80,000 மெற்றிக் தொன் நெல்லை சந்தைக்கு விட்டால் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம். அரசாங்கம் சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளதாகவும் நெல்லை 102 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கே நிதி ஒதுக்கியதாகவே தெரிவித்தது.
ஆனால் வங்கிகள் கடன் கொடுக்க மறுக்கின்றனர். கடந்த ஆட்சியில் 180 ரூபாவுக்கு அரிசி விற்கப்பட்ட போதும் அதற்கு அதிகமான விலைக்கே நெல் கொள்வனவு செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.





பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam

கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
