விவசாயிகள் அச்ச நிலையில்! வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனம் குற்றச்சாட்டு
வனவளத்திணைக்களத்தின் அண்மைய செயற்பாடுகளால் விவசாயிகள் அச்சநிலையில் இருப்பதாக வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனத்தின் தலைவர் எஸ்.பிரான்சிஸ் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
காணி விடுவிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், வனவளத்திணைக்களத்தால் எல்லையிடப்பட்ட காணிகள் விடுவிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்தாலும் வவுனியாவை பொறுத்தவரை அவ்வாறு எந்தகாணியும் விடுவிக்கப்படவில்லை என்றே கூறவேண்டும்.
அத்துடன் நீண்டகாலமாக பராமரிக்கப்படாத காணிகள் இனிமேல் மக்களுக்கு கிடைக்காது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் காடுகளாக இருக்கும் தமது காணிகளை துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வனவளத்திணைக்களம் அந்த பணியை செய்ய தடை போடுகின்றது. அவ்வாறு செய்பவர்களையும் கைது செய்கின்றது. இந்த நிலை தொடர்ந்தால் எவ்வாறு மக்கள் தமது காணிகளை துப்புரவாக்குவது. இதனால் விவசாயிகளும், மக்களும் அச்சநிலையில் உள்ளனர்.
நீதியான முடிவு
இதற்கு ஒரு நீதியான முடிவினை அரசு வழங்க வேண்டும். சில காணிகளுக்குள் கிணறுகள் உள்ளது. அவ்வாறான காணிகளையும் புனரமைக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.
30 வருடங்களாக இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் தமது சொந்த இடங்களுக்கு மீளத்திரும்பவில்லை. அவர்களது வீடுகளை மூடி காடுகள் வளர்ந்துள்ளது. அந்த காணிகள் தொடர்பாக கிராம அலுவலர்கள் உறுதிப்படுத்தி கடிதம் வழங்கினாலும் வனவளத்திணைக்களம் அதனை ஏற்க்க மறுக்கின்றது.
பலர் காணிகளுக்கான அனுமதிப்பத்திரத்தையும் வைத்துள்ளனர். ஆனால் அது செல்லுபடியாகாது என்று கூறுகின்றனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு அரசாங்கம் நல்லதொரு தீர்வை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
