அரிசி இறக்குமதி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
அரிசி இறக்குமதி செய்யப்படும் போது பாரியளவில் மோசடி இடம்பெறக்கூடிய சாத்தியம் உண்டு என தொழிற்சங்க ஒன்றியத்தின் கூட்டமைப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அரிசி இறக்குமதி
இந்தியாவிலிருந்து நாடு அரிசி இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக மோசடியான முறையில் இலாபமீட்ட சிலர் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள ஸ்வர்ண நாடு அரிசி ஒரு கிலோ கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வர 110 ரூபா செலவாகின்றது என ஒன்றியத்தின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
எனினும், ஒரு கிலோ கிராம் நாடு அரிசியின் சில்லறை விலை 220 ரூபாவாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளமைக்கான காரணத்தை அரசாங்கம் விளக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
விற்பனை
70000 கிலோ கிராம் அரிசி இறக்குமதி செய்யப்பட்டால் அதன் ஊடாக 770 கோடி ரூபா தரகுப் பணம் கிடைக்கப் பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த மோசடியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வரும் தரப்பினர் யார் என்பது பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
