பெண்களிடம் கூரிய ஆயுதத்தை காண்பித்து கொள்ளை! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
பெண்களை மிரட்டி பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்ற இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சொத்துக்கள் கொள்ளை
சந்தேகநபர்கள் இருவரும் கொஸ்கம மற்றும் வாதுவ ஆகிய பிரதேசங்களில் உள்ள மசாஜ் நிலையங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருக்கும் பணிப் பெண்களிடம் கூரிய ஆயுதங்களை காண்பித்து அவர்களை மிரட்டி பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் சேதவத்தை பிரதேசத்தில் வைத்து திருடப்பட்டது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “சேதவத்தை கசுன்” என்பவரின் உதவியாளர்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.