அநுர நிதி அமைச்சர் பதவி விலகிய பின்னரே நீதியான விசாரணை தொடரும்..! சுரேன் ராகவன்
ஆஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகை திருடப்பட்டமை தொடர்பாக, சுதந்திரமான மற்றும் கட்சி சார்பற்ற விசாரணையை முன்னெடுக்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், குறிப்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் இந்த விசாரணைகளை மேற்கொள்வதே மிகவும் பொருத்தமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பக்கச் சார்பற்ற விசாரணை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்த நிதி மோசடி விவகாரத்தில் ஜனாதிபதி நேரடியாகத் தலையீடு செய்து, முறையான விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும்.
குறிப்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் இந்த விசாரணைகளை மேற்கொள்வதே மிகவும் பொருத்தமானது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளை அல்லது நபர்களைத் தற்காலிகமாகப் பணி இடைநீக்கம் செய்யாமல், அவர்களை முழுமையாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

அத்துடன், நாட்டுக்கு ஏற்பட்ட நிதி இழப்பை, சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட சொத்துக்களிலிருந்து மீள வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய நிதி அமைச்சர் பதவியிலிருந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விலகி, அதனைப் பொறுப்பு வாய்ந்த ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும். அதன் பின்னரே இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் பக்கச் சார்பின்றி முன்னெடுக்கப்பட வேண்டும்.
நாட்டின் திறைசேரியே இவ்வாறான ஊடுருவல்களுக்கு உள்ளாகுமாயின், இலங்கையில் முதலீடு செய்வதற்கு எவரும் முன்வர மாட்டார்கள். இது தொடர்பில் அரசு நாட்டுக்கு முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam