பேருந்து கட்டணத்தில் திருத்தம்...! பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்
பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இம்மாதம் நடைபெறும் பேருந்து கட்டண மீளாய்வின் போது இக்கட்டண குறைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.
இன்றைய தினம் (01.05.2023) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதர பொருட்களின் விலைகள்
மேலும் அவர் கூறியுள்ளதாவது, இம்முறை எரிபொருள் விலை திருத்தத்தில் டீசல் விலையில் குறைப்பு இல்லையென்றாலும் கடந்த மாதம் டீசல் விலை குறைக்கப்பட்டதை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணத்தை திருத்த தயாராக இருக்கின்றோம்.
டீசல் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டதன் பயனை மக்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பார்கின்றோம்.
மேலும் பொருட்களின் விலைகள், உதிரி பாகங்களின் விலைகள் மற்றும் இதர பொருட்களின் விலைகள் கணக்கிடப்பட்டு, இம்மாதம் நடைபெறும் மீளாய்வின் போது பேருந்து கட்டணங்கள் திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri