முச்சக்கரவண்டி கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு
கொழும்பு மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் (01.06.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயத்தை கூறியுள்ளது.
எரிபொருள் விலை குறைப்பு மற்றும் வாராந்த எரிபொருள் ஒதுக்கம் அதிகரிப்பு என்பனவற்றைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில், நாளைய தினம் (02.06.2023) முதல் முச்சக்கர வண்டிகளில், 2ஆம் கிலோமீற்றர் முதல் அறவிடப்படும் கட்டணம் 80 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
எனினும், முதலாவது கிலோமீற்றருக்கு அறவிடப்படும் 100 ரூபா கட்டணத்தில் மாற்றமில்லை என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |