வடக்கு கல்வித் திணைக்களத்தில் தலைகீழாக பொறிக்கப்பட்ட பதவி முத்திரை
வடமாகாண கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் த.உமாவின் பதவி முத்திரை தலைகீழாக பொறிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
வட மாகாண கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாண கல்வி பணிப்பாளரின் கையெழுத்துடன் அனுப்பப்பட்ட கடிதத்திற்கே இவ்வாறு தலைகீழாக அவரது பதவி முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது.
அசமந்த போக்குகள்
மேலும், குறித்த கடிதத்தில் பதவி முத்திரையை பொறித்தவர் தலைகீழாக பெறிக்கப்பட்டுள்ளது என தெரிந்தும் கடிதத்தை புதிதாக வரையாமல் தலைகீழாக பொறிக்கப்பட்ட பதவி முத்திரைக்கு மேலாக மீண்டும் பதவி முத்திரையை பொறித்து அனுப்பியுள்ளார்.
அண்மைக் காலமாக வடக்கு மாகாண கல்வி அமைச்சில் நிர்வாக முறைகேடுகள் இடம்பெறுவதாக பல்வேறு தரப்பினர்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கடிதத்துக்கு கூட ஒழுங்காக பதவி முத்திரை இடப்படாமை கல்வி அமைச்சு மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆதாரப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |