தமிழர் விரும்பும் ரணிலை விடுத்து தமிழ்ப் பொது வேட்பாளர் எதற்கு...! ஐ.தே.க. கேள்வி
தமிழ் மக்கள் விரும்புகின்ற தலைவராக திகழும் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற
நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளர் ஏன் அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின்
தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் ஏன் அதிக கவனம் செலுத்துகின்றார்கள் எனவும் வினவியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"நடக்கக்கூடிய விடயங்கள் தொடர்பில் வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும்.
அதைவிடுத்து மக்கள் விரும்பாத - சாத்தியம் இல்லாத விடயங்கள் தொடர்பில் பேசி காலத்தை வீணடிக்கக்கூடாது.
அந்தவகையில், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயமும் தேவையற்ற ஒன்றாகும்
தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் என்ன தீர்மானம் எடுத்தாலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கே தமிழ் மக்கள் ஆதரவு வழங்குவார்கள்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |