2,100 கிலோ மஞ்சள் இறக்கப்பட்ட பின்பு திருப்பி அனுப்பப்பட்ட கடத்தல்காரர்கள்!
புத்தளம், கற்பிட்டி கடற்பரப்புக்குள் பெருமளவு மஞ்சளுடன் ஊடுருவிய இந்திய நாட்டுப் படகில் இருந்த மஞ்சள் இறக்கப்பட்ட பின்பு கடத்தல்காரர் ஆறு பேரும் பத்திரமாகத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்திய மீனவர்களின் நாட்டுப் படகில் 60 மூடைகளில் 2 ஆயிரத்து 100 கிலோ மஞ்சளைக் கடத்தி வந்த படகை நேற்றிரவு கைப்பற்றிய கடற்படையினர், அதில் இருந்த ஆறு இந்தியர்களையும் கற்பிட்டி இறங்குதுறைக்குக் கொண்டு வந்து மஞ்சளை இறக்கினர்.
இவ்வாறு இந்தியப் படகில் இருந்த மஞ்சள் இறக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட நிலையில் படகில் இருந்த ஆறு இந்தியர்களும் இன்று மாலை மஞ்சள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நாட்டுப் படகிலேயே பத்திரமாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படனர்.
1055ஆம் இலக்கப் படகில் கடத்தல்காரர்கள் ஆறு பேரும் புத்தளத்துல் இருந்து தமிழகம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
