பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது! கோரிக்கையை நிராகரித்த ரணில்(video)
ஓய்வு பெறும் வயதில் உள்ள வெளிநாடுகளுக்கான நான்கு தூதுவர்கள் மற்றும் ஒரு உயர் ஸ்தானிகர் ஆகியோருக்கு, மூன்று வருட பதவிக் காலத்தை பூர்த்தி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி அலுவலகம் நிராகரித்துள்ளது.
பொதுத்துறை ஊழியர்கள் 60 வயதிற்குள் ஓய்வு பெற வேண்டும் என்ற அரசாங்கக் கொள்கையை வைத்து எந்த நீடிப்புகளையும் வழங்குவதில்லை என்ற அடிப்படையிலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
வெளியுறவு அமைச்சின் மேலும் பல கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஓய்வுபெறும் வயதை மாற்றியமைத்த போதிலும், இலங்கை வெளிவிவகாரச் சேவையிலிருந்து நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்களின் விடயத்தில் மூன்று வருட பதவிக் காலத்தை பூர்த்தி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்கனவே வெளிவிவகார அமைச்சு எடுத்திருந்தது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 14 மணி நேரம் முன்

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
