விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் காலம் நீடிப்பு
அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் சேவை காலத்தை 63 வயது வரை நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் நேற்று (27.06.2023) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக குறைக்கும் அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசேட வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது
176 வைத்தியர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் எம்.ஏ.ஆர்.மரிக்கார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, விசேட வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதை 63 ஆக அதிகரிக்க சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளரிடமிருந்து தனக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கும் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.
மனு பரிசீலனை
ஜூன் 30 ஆம் திகதிக்குள் பிரேரணையின் மூலம் நீதிமன்றத்திற்கு இந்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி, சஞ்சீவ ஜயவர்தன, சுகாதார அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
எனினும் சில விசேட வைத்தியர்கள் இம்மாதம் 30 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள நிலையில், இந்த மனுவை இன்றைய தினமும் (28.06.2023) பரிசீலிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இதன்படி, குறித்த மனுவை இன்றைய தினமும் பரிசீலிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
