திருகோணமலையில் மாணவனுக்கு கசிப்பு அருந்த கொடுத்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் கைது
திருகோணமலை- கோமரங்கடவல, அடம்பன பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த குற்றத்திற்காக ஓய்வு பெற்ற இராணுவ வீரரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் நேற்று(22.01.2026) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர், குறித்த சிறுவர்களை அழைத்துச் சென்று கசிப்பு அருந்த கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கோமரங்கடவல பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
கைது
இந்நிலையில், குறித்த மாணவர்களை கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சட்ட வைத்தியரின் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

எட்டாம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், குறித்த மாணவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan