அரசாங்கத்தின் தீர்மானங்களால் கிடைக்கப்பெற்றுள்ள சிறந்த பெறுபேறுகள்
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஜுலை மாதம் வரையிலான காலப்பகுதியில் இறக்குமதி செலவீனம் நூற்றுக்கு 25 வீதம் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று(04.10.2022) உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இறக்குமதி தடையால் சிறந்த பெறுபேறு
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாகவே இறக்குமதி செலவீனம் குறைவடைந்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் சிறந்த பெறுபேறுகளை வழங்கியுள்ளது.
ஏற்றுமதி வருமானம்
இதேவேளை ஏற்றுமதி வருமானம் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதுடன், கடந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 90 வீதம் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தின் வருமானமாக 1232.4 பில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், செலவீனம் 3539 பில்லியன் ரூபாய் செலவீனமாக பதிவாகியுள்ளது.
இதற்கமைய அரசாங்கத்திற்கு இதுவரையிலான காலப்பகுதியில் 2306.6 பில்லியன் ரூபாய் மீதியாக எஞ்சியுள்ளது.”என தெரிவித்துள்ளார்.

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam
