அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு! செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடு
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளும் செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இந்த வருடத்துக்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் மாத்திரமே இனி வரும் காலங்களில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியும்.
கட்டுப்பாடுகள்
வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்குறித்த தீர்மானங்களை அறிவித்துள்ளார்.
அத்துடன் அமைச்சரவைத் தீர்மானங்கள் மற்றும் அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பான கேள்விகள், அரசாங்கம் தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட முக்கிய கேள்விகளுக்கு மாத்திரமே இனி வரும் காலங்களில் தான் பதிலளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பை மேற்கொள்வதற்காகவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
