வாகனங்களில் எரிபொருளை சிக்கனப்படுத்தலாம்! மோட்டார் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள தகவல்
நகரங்களில் நிறுவப்பட்டுள்ள வீதி அடையாளங்களுக்கான சமிஞ்சை இயந்திரங்களால் அதிகமாக எரிபொருளை சிக்கனப்படுத்த முடியுமென மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நகரங்களில் நிறுவப்பட்டுள்ள 200 வீதி அடையாளங்களுக்கான சமிஞ்சை இயந்திரங்களை பொறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் சிக்கனம்
இந்தப் போக்குவரத்து சமிஞ்சைகள் செயல்பாட்டில் இருக்கும்போது, சாரதிகளுக்கு சரியான நேரத்தில் வீதி சமிஞ்சைகளை அது காட்சிப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனால் வாகனத்தின் இயந்திரத்தை இயக்கத்திலேயே வைத்திருக்க வேண்டிய தேவையில்லை என்றும் கூறப்படுகின்றது.
இதன் மூலம் எரிபொருள் சிக்கனம் அதிகரிக்கும் என்றும் தேவையற்ற புகைகள் குறையும் என்றும் மோட்டார் போக்குவரத்துத் துறை மேலும் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கான நிதியின், முதல் கட்டமாக 56 மில்லியன் ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் இதில் 33 மில்லியன் ரூபாய் சமீபத்தில் நகர மேம்பாட்டு ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.