சமூக வலைத்தளங்களில் வெளியாகும் மத்திய வங்கியின் ஆளுநரின் AI காணொளிகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் மத்திய வங்கியின் ஆளுநரின் படத்தை தவறாகப் பயன்படுத்தி, AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மோசடி காணொளிகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தலில்,
இத்தகைய ஏமாற்று காணொளிகள் மூலம், சட்டத்தால் தடைசெய்யப்பட்ட முதலீட்டு முறைகளை மத்திய வங்கியின் ஆளுநர் அங்கீகரிப்பதாக போலியாக சித்தரிக்கப்படுகிறது.
AI தொழில்நுட்பம்
இவ்வாறான முதலீடுகளுக்கு பொதுமக்களை தூண்டுவதற்காக மோசடி திட்டங்களை வகுப்பதே இத்தகைய காணொளிகளை வெளியிடுவதன் நோக்கமாகும்.
இந்த காணொளிகள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை கொண்டு, மோசடி தரப்பினரால் பொதுமக்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. விழிப்புடன் இருங்கள்.
அத்துடன், இத்தகைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
விடுத்துள்ள எச்சரிக்கை
எமது இணையதளம் (www.cbsl.gov.lk) மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்கள் போன்ற இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ மூலங்களிலிருந்து தகவல்களின் சரியான தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இத்தகைய சந்தேகத்திற்குரிய தகவல்கள் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ தொடர்பு சேனல்களுக்கு அறிவிக்கவும்.
இத்தகைய மோசடிகளுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனங்களுடன் இலங்கை மத்திய வங்கி தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது. இத்தகைய மோசடி நடவடிக்கைகளுக்கு பலியாகாமல் இருக்குமாறு மத்திய வங்கி பொதுமக்களிடம் கோரியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |