மூன்று வாரங்களின் பின்னர் வெளியான பாப்பரசரின் குரல் செய்தி
மூன்று வாரங்களுக்கு முன்னர், நிமோனியாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பாப்பரசர் பிரான்சிஸ், தனது முதல் குரல் செய்தியை அனுப்பியுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள நலம் விரும்பிகளுக்கும், தங்கள் ஆதரவை வழங்கியவர்களுக்கும், "என் இதயத்தின் ஆழத்திலிருந்து" நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.
குரல் செய்தி
இந்த குரல் செய்தி, செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்ற பிரார்த்தனை சேவையின் போது ஒலிபரப்பப்பட்டுள்ளது.

"எனது உடல்நலத்திற்காக சதுக்கத்தில் நீங்கள் பிரார்த்தனை செய்ததற்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன்" என்று அவர் தனது தாய்மொழியான ஸ்பானிஷ் மொழியில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சில வார்த்தைகளை இடைநிறுத்தி ஆழ்ந்த மூச்சை எடுத்த பின்னர் "கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக." என்று தமது செய்தியை அவர் முடித்துக்கொண்டார்.
2025, பெப்ரவரி 14 ஆம் திகதியன்று, பிரான்சிஸ் கடுமையான சுவாச தொற்று காரணமாக ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு, இன்னும் எவ்வளவு காலம் சிகிச்சை நீடிக்கும் என்று அவரது மருத்துவர்கள் கூறவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam