மற்றுமொரு விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
பால் தேநீரின் விலை குறைப்பு தொடர்பில் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பால் தேநீர் ஒன்றின் விலை குறைக்கப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது 100 ரூபாவாக காணப்படும் ஒரு பால் தேநீரின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் மா விலை குறைப்பின் எதிரொலி
ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பால் மாவின் விலை குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் மன்றம் அறிவித்திருந்தது.
இதற்கமைய ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினாலும் 400 கிராம் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பால் தேநீரின் விலையும் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
