மட்டக்களப்பு மாநகருக்குள் நாளை வர்த்தக நிலையங்கள் அனைத்தினையும் மூடுவதற்கு தீர்மானம்
மட்டக்களப்பு மாநகருக்குள் நாளை வர்த்தக நிலையங்கள் அனைத்தினையும் மூடுவதற்கானதீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
பல்பொருள் அங்காடிகள்,மருந்து பொருட்கள் விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் அனைத்தும் நாளை ஞாயிற்றுக்கிழமை மூடுவதற்கான கோரிக்கையினை சுகாதார திணைக்களம் விடுத்துள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்புக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக மக்கள் தேவையற்ற நடமாட்டங்களை கட்டுப்படுத்திக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுவருடத்தினை அமைதியான முறையில் வீடுகளில் இருந்து ஏற்பாடுகளை செய்து அமைதியாக கொண்டாடுமாறும் நகர்ப்பகுதிக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri