நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடும் மழை காரணமாக இலங்கையில் உள்ள 30 இற்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீர்த்தேக்கங்களின் நீர் வரத்தை பொறுத்து வான் கதவுகள் (Spill gates) திறக்கப்படும் அளவுகள் மாற்றப்படலாம் என நீர்ப்பாசனத் துறை அறிவித்துள்ளது.
தெதுரு ஓயாவின் 8 வான் கதவுகள் தலா 3 அடி திறக்கப்பட்டு, விநாடிக்கு 15,700 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
வான் கதவுகள் திறப்பு
ராஜங்கனையின் 10 வான் கதவுகள் தலா 4 அடி திறக்கப்பட்டு, விநாடிக்கு 8,880 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அங்கமுவவின் 2 வான் கதவுகள் தலா 4 அடி திறக்கப்பட்டு, கலா வெவ நோக்கி நீர் விடப்படுகிறது. தப்போவவின் 8 வான் கதவுகள் தலா 2 அடி திறக்கப்பட்டுள்ளன. இங்கினிமட்டியவின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டு மீ ஓயாவுக்கு நீர் வெளியேற்றப்படுகிறது.
எனவே,தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் நீர்நிலைகள், நதிக்கரைகளின் அருகில் வாழ்வோர் நீர்மட்டம் உயர்வது குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், அனர்த்த முகாமை பிரிவினரின் மற்றும் நீர்ப்பாசனத் துறையின் அறிவிப்புகளைத் தொடர்ந்து பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விரைவில் திருமணம் செய்யப்போகும் காவ்யா மாறன்-அனிருத் சொத்து மதிப்பு... எத்தனை கோடிகள் தெரியுமா? Cineulagam