புதிய கோவிட் பர்ட்சிப்பு கருவி, முகக்கவசம் அறிமுகப்படுத்தியுள்ள பேராதெனிய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு, புதிய கோவிட் பர்ட்சிப்பு கருவி( கட்டளை) மற்றும் முகக்கவசம் என்பவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
நடப்பு கோவிட் பரவலுக்கு மத்தியில் அவசியமான இந்த இரண்டு உற்பத்திகளையும் சத்தோச நிறுவனமும் இலங்கை வியாபார பொதுக்கூட்டுத்தாபனமும் சந்தைப்படுத்துவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்த்தன இது தொடர்பான அறிவித்தலைச் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இன்று வெளியிட்டுள்ளார்.
“ரெஸ்பிரினோ நனோ 99” என்ற பெயரில் புதிய முகக்கவசம் சர்வதேசச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது சத்தோசவிலும் இலங்கை வியாபார கூட்டுத்தாபனத்திலும் 200 ரூபா விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததும் இந்த உற்பத்திகள் சர்வதேசச் சந்தைக்கு அனுப்பப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தமது புதிய உற்பத்தியான முகக்கவசம் வைரஸ் மற்றும் பக்டீரியாவை கொல்லக்கூடும் அத்துடன் தடையற்ற சுவாசத்துக்கும் அது பிரச்சனையை ஏற்படுத்தாது என்று பேராசிரியர் உபாலி திசநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த முகக்கவசத்தை 25 தடவைகள் கழுவிப் பயன்படுத்தமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை பேராதெனிய பல்கலைக்கழக ஆராச்சிக்குழுவின் புதிய கோவிட் பரீட்சிப்பு கருவியை 1500 ரூபாவுக்கும் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளரான பேராசிரியர் ருச்சிக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய கருவி எந்தவொரு வைரசையும் அடையாளம் காணும் தன்மைகொண்டது. இதன் மூலம் கோவிட் தொடர்பான ஆய்வு முடிவை இரண்டு மணித்தியாலங்களுக்குள் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த கோவிட் பரீட்சிப்பு கருவிக்கு மருத்துவ
ஆராச்சிக்கழகத்தின் அனுமதி கிடைத்ததும் அது சந்தைக்கு விற்பனைக்கு வரும்
என்றும் பேராசிரியர் ருச்சிக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri