கடற்கொள்ளையர்களிடமிருந்து இலங்கை மீன்பிடி படகு மீட்பு
கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட இலங்கை மீன்பிடி படகு நேற்று சீஷெல்ஸ் நாட்டின் தலைநகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.
06 கடற்றொழிலாளர்களுடன் திக்விட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட "லோரன்சோ சோன் 04" என்ற பல நாள் மீன்பிடி கப்பல் கடந்த 27ஆம் திகதி அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டது.
இரண்டு நாட்களுக்கு பிறகு, சீஷெல்ஸ் கடற்படையினர் 6 கடற்றொழிலாளர்களுடன் கப்பலை பாதுகாப்பாக மீட்டனர்.
மீன்பிடி படகு மீட்பு
அத்துடன் கப்பலை கடத்திய மூன்று கடற்கொள்ளையர்களை அவர்கள் கைது செய்திருந்தனர்.
இதன்படி சீசெல்ஸ் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 06 மீனவர்களும் மூன்று கடற்கொள்ளையர்களும் பாதுகாப்பாக சீஷெல்ஸ் தலைநகர் விக்டோரியா துறைமுகத்திற்கு நேற்று கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கடற்கொள்ளையர்களால் பிடிபட்ட நிலையில் மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் நேற்று முதல் தடவையாக கப்பலின் உரிமையாளரை தொடர்பு கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 7 மணி நேரம் முன்

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
