நாரம்மலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்:நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாரம்மலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
நாரம்மலை பிரதேசத்தில் அண்மையில் லொறியொன்றை துரத்திச் சென்று நிறுத்தியபோது, சப்-இன்ஸ்பெக்டர் தனது துப்பாக்கியை லொறி சாரதியின் தலையில் வைத்து அச்சுறுத்த முயன்ற போது துப்பாக்கி வெடித்து லொறி சாரதி உயிரிழந்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
நாரம்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

நாரம்மல நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர் மீண்டும் நேற்று(31.01.2024) முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan