நாயாறு கடலில் மாயமாகிய குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
முல்லைத்தீவு (Mullaitivu) நாயாறு கடல் பகுதியில் கடலில் மூழ்கிய குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த குடும்பஸ்தரின் சடலம் இன்றையதினம் (29.04.2024) கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, நாயாறு கடல் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற ஐந்து பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை கடலில் நீராடியுள்ளார்கள்.
இதன்போது, ஒருவரைக் கடல் நீர் இழுத்துச் சென்றுள்ளதையடுத்து, காப்பாற்ற முற்பட்ட மற்றொரு நபரும் நீரில் மூழ்கியுள்ளார்.
கரையொதுங்கிய சடலம்
இதனையடுத்து, நாயாறு கடற் படையினரின் உதவியுடன் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்றைய நபரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது.
அறிவித்தல் பலகை
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக நீரில் மூழ்கி பலர் உயிரிழந்து வருவதோடு இங்கு, நீராடுவதற்கு ஆபத்தான பகுதி என அறிவித்தல் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மீசாலை வடக்கு கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri