இளம் தாயின் கொடூர செயல் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்
தென்னிலங்கையில் இளம் தாய் ஒருவர் கொடூர செயற்பாடு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி, மஹாபாகே பிரதேசத்தில் நேற்று 9 மாத குழந்தையை காணவில்லை என தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் நடத்திய விசாரணையில், அவர் வசித்த வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட குழந்தை
மேலதிக விசாரணையின் போது, குழந்தையை கிணற்றில் வீசி தாயே கொன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய, கொலை தொடர்பில் குழந்தையின் தாயார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ராகம - ஹலந்துருவ வீதியில் வசிக்கும் 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
