சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசாங்கத்தால் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை
73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வாகனங்களில் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று(திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு தேசியக் கொடியை பறக்கவிடுமாறு தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்களின் கட்டடங்களை எதிர்வரும் 3 ஆம் 4 ஆம் திகதிகளில் ஒளி விளக்குகளால் அலங்கரிக்குமாறும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும் என தேசிய பாதுகாப்பு, உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி பொது இடங்கள், அரச திணைக்கள வளாகங்கள் மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய நலன் கருதி மரக்கன்றுகளை நடுகை செய்வது குறித்து பரிசீலிக்க அர ச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.