படுகொலைகள் மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த தலையிடுமாறு மகாசங்கத்தினரிடம் வேண்டுகோள்
இலங்கையில் நிகழும் படுகொலைகள், குற்றச்செயல்களை கட்டுப்படுத்த தலையிடுமாறு மகாசங்கத்தினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
அமரபுர நிகாயவின் பிரதம பதிவாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள ராஜகீய பண்டித சங்கைக்குரிய பலப்பிட்டியே சிரிசீவலி தேரருக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
மகாசங்கத்தினர் தலையீடு
பலப்பிட்டியவில் நடைபெற்ற குறித்த வைபவத்தில் கலந்து கொண்டு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு முன்னதாக அவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த மகாசங்கத்தினர் தலையீடு செய்தால் சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும்.

மேலும் இலங்கையில் நிகழும் படுகொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் மகாசங்கத்தினர் தலையீடொன்றை மேற்கொண்டால் அது சிறந்த பலனைத் தரும் என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri