தேடப்படும் செவ்வந்தி தொடர்பில் வெளியான பகீர் தகவல் - கொலைக்கு முன் நடந்தவை அம்பலம்
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு, துப்பாக்கிச் சூடு நடத்திய கமோண்டோ சமிந்துவும், செவ்வந்தியும் ஒத்திகை பார்த்துள்ளமை விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களான இருவரும் சம்பவத்திற்கு 2 நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு சென்று ஒத்திகை பார்த்து, திட்டத்தை ஒழுங்கமைத்ததாக, கொழும்பு குற்றப்பிரிவை சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவலை, தற்போது தடுப்புக் காவலில் உள்ள மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
பொலிஸ் விசாரணை
குறித்த நபரே அவர்கள் இருவரையும் நீதிமன்ற அறையை காட்டுவதற்கு முன்வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீதிமன்ற அறையைக் காட்ட முன்வந்ததற்காக செவ்வந்தியிடமிருந்து 2000 ரூபாய் பெற்றதாகவும் அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற அறையை காட்டிய பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் செவந்தியும், துப்பாக்கிச்சூட்டு நடத்திய பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளை உட்பட இருவரும் நடித்து ஒத்திகை பார்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 3 நாட்கள் முன்

கட்டாயப்படுத்தி நடிகர் ஆக்கிய பாரதிராஜா.. மறைந்த நடிகர் மனோஜ் கெரியர் தொடங்கியதே இப்படித்தான் Cineulagam

2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு News Lankasri
