மே தின நிகழ்வுகளை ரத்துசெய்யுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை
நாட்டின் கோவிட் நிலைமையைக் கருத்திற்கொண்டு மே தின நிகழ்வுகளை ரத்துசெய்யுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தாண்டுக் காலத்தில் பொதுமக்கள் உரிய சுகாதார நடைமுறையைக் கடைப்பிடிக்காமை காரணமாக எதிர்வரும் வாரத்தில் கோவிட் தொற்று நிச்சயமாக அதிகரிக்கும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர் சம்மேளனத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தொற்றுக்களில் பெரும் எழுச்சி ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
எனவே, நிலைமையை மோசமாக்கும் என்பதால் மே தினத்தில், எந்த பேரணிகளையும் நடத்த வேண்டாம் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் நாங்கள் கோருவதாக உபுல் ரோஹன கோரியுள்ளார்.
கோவிட் வைரசின் பரவலைப் பொறுத்தவரை இலங்கை ஒரு மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இந்தநிலையில் புது வருடக்காலங்களில் மக்களின் மோசமான நடத்தையின் விளைவு இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வெளிப்படும்.
எனவே, தற்போது கோவிட் தொற்றுக்கள் முறையாக நிர்வகிக்கப்படாவிட்டால், நாட்டின்
மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று அவர் வலியுறுத்தினார்
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam