இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஒரு வருட காலத்திற்கு இலங்கை தேசிய அணியின் பயிற்சியாளராக செயற்படுமாறு தம்மிடம் கோரப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிக பயிற்சியாளர்
முன்னதாக இலங்கை அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக சனத் நியமிக்கப்பட்ட நிலையில், அணியின் முன்னேற்றம் சிறப்பானதாக அமைந்துள்ளது.

இதனையடுத்தே அவர் மேலும் ஒரு வருடத்துக்கு தலைமை பயிற்சியாளராக செயற்பட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
ஏற்கனவே, அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ண 20க்கு20 போட்டிகளில் இலங்கை அணி சிறப்பாக செயற்படாமையை அடுத்து, அணியின் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் உட்பட்டவர்கள் விலகியதை அடுத்தே சனத் ஜெயசூரிய, தற்காலிக தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri