கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்வதை தொடருமாரு ஜனாதிபதியிடம் கோரிக்கை
கொரோனாவினால் மரணமடைவோரின் சடலங்களை தகனம் செய்வதை தொடருமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் டொலவத்த இந்த கோரிக்கையை எழுத்து மூலமாக விடுத்துள்ளார்.
இந்த விஷயத்தில் மருத்துவ நிபுணர்கள் இறுதி முடிவு எடுக்கும் வரை தகனமுறை தொடரப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
கொரோனா முதல் அலையின் போது சுகாதார அதிகாரிகள் வகுத்த வழிகாட்டுதல்களை பின்பற்றி கொரோனாவினால் மரணமானவர்கள் தகனம் செய்யப்பட்டனர்.
எனினும் இரண்டாவது அலையின் பின்னர் இலங்கை தௌஹீட் ஜமாத் அமைப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளதாக வெளியிட்ட அறிக்கையின் பின்னரே இது தொடர்பான பிரச்சினை உருவானது என்று பிரேம்நாத் டொலவத்த சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது நம்பிக்கைக்கு முன்னுரிமை கொடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கொரோனவினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருப்பது மருத்துவ கருத்துக்களை முற்றிலும் நிராகரிப்பதாகும்.
கொரோனவினால் மரணமடைவோரின் சடலங்களை தகனம் செய்யும் செயற்பாடு ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது மதத்தைத் தாக்கும் நோக்கம் கொண்டது அல்ல.
அத்துடன் எல்லா சட்டங்களும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும் பிரேம்நாத் டொலவத்த தமது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam