பல்கலைக்கழகத்தினால் மூடப்பட்டுள்ள வீதி - திறந்து மக்கள் பாவனைக்கு வழங்குமாறு கோரிக்கை

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples
By Kumar Jun 16, 2026 06:51 AM GMT
Report

மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குச் சொந்தமான, கொம்மாதுறை மேற்கில் கிழக்கு பல்கலைக்கழகத்தினால் மூடப்பட்டுள்ள ஒடியார் வீதியை திறந்து மக்கள் பாவனைக்கு வழங்க வேண்டும் என பிரதேசத்தின் பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (15.06.2026) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மகிந்தவுக்கு ஏற்பட்ட மறதி - அநுர அரசின் அமைச்சருடன் நெருக்கமாக பேசியது என்ன....!

மகிந்தவுக்கு ஏற்பட்ட மறதி - அநுர அரசின் அமைச்சருடன் நெருக்கமாக பேசியது என்ன....!

மூடப்பட்டுள்ள வீதி

பொது அமைப்புகள் கூறுகையில், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குச் சொந்தமான, கொம்மாதுறை மேற்கில் அமைந்துள்ள ஒடியா வீதி (கிழக்கு பல்கலைக்கழக வீதி) தற்பொழுது கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

இந்த வீதியானது புறம்படி பகுதியிலிருந்து திருகோணமலை பிரதான வீதியை இணைக்கும் ஒரு முக்கிய பாதையாகும். சுமார் 65 வருடங்களுக்கும் மேலாகப் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த இந்த வீதிக்கு, கடந்த 1989ஆம் ஆண்டில் தான் மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன.

பல்கலைக்கழகத்தினால் மூடப்பட்டுள்ள வீதி - திறந்து மக்கள் பாவனைக்கு வழங்குமாறு கோரிக்கை | Request To Open The Closed Road For Public Use

எனினும், அதற்கு முன்பிருந்தே மக்கள் இந்த வீதியைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர். விவசாய நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகள் (சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலப்பரப்பு) பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள்,கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் விசேட தேவையுடைய பிள்ளைகள் எனப் பல தரப்பினரும் அன்றாடம் பயன் பெற்று வந்தனர்.

வெறும் 150 மீட்டர் தூரத்தைக் கடந்து பிரதான வீதியை அடையக்கூடிய வசதி இருந்தும், தற்பொழுது இந்த வீதி மூடப்பட்டுள்ளதால், மக்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சுற்றிப் பயணிக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், இப்பகுதியானது வடகீழ் பருவக்காற்றுக் கால மழையினால் சுமார் 6 அடிக்கும் மேல் வெள்ளம் தேங்கக்கூடிய ஒரு பகுதியாகும்.

கண்டி மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை..!

கண்டி மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை..!

கடிதங்கள் மூலம் கோரிக்கை

அவ்வாறான ஒரு மோசமான வெள்ளப்பெருக்கின் போது, விசேட தேவையுடைய பிள்ளை ஒன்றைக் காப்பாற்ற முயன்ற முதியவர்கள் இருவர் உயிரிழந்த துயரச் சம்பவமும் இங்கு நிகழ்ந்துள்ளது. யுத்த காலத்தைக் காரணம்காட்டி மூடப்பட்ட இந்த வீதியை மீண்டும் திறக்குமாறு, யுத்தம் முடிவடைந்த பின்னரும் பொதுமக்கள் தரப்பிலிருந்து ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர் மற்றும் பிரதேச சபை ஆகியோருக்குப்  பலமுறை கடிதங்கள் மூலம் கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்கும் இது தொடர்பான கடிதங்கள் அனுப்பப்பட்டும், இதுவரை எந்தவொரு முறையான பதிலும் வழங்கப்படவில்லை. கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள், எழுத்துப்பூர்வமான எந்தவொரு பதிலும் அளிக்காமல், சாக்குப்போக்குகளைக் கூறி இந்த விவகாரத்தைக் காலம்கடத்தி வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தினால் மூடப்பட்டுள்ள வீதி - திறந்து மக்கள் பாவனைக்கு வழங்குமாறு கோரிக்கை | Request To Open The Closed Road For Public Use

கடந்த 1971ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச வர்த்தமானியில், இந்த வீதி பொதுமக்களுக்கானது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் போன்ற பிற பல்கலைக்கழகங்கள், தனிநபர் ஒருவருக்காகக் கூடத் தங்கள் பாதைகளைத் திறந்துவிட்டுள்ள வரலாறுகள் உண்டு. யாழ்ப்பாணம், பேராதனை போன்ற எந்தவொரு பல்கலைக்கழகமும் பொதுமக்களின் வீதிகளை மூடிய சரித்திரம் இல்லை.

ஆனால், கிழக்கு பல்கலைக்கழகம் மட்டுமே தங்களை ஏமாற்றி, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். பொதுமக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும், உரிமையையும் கருத்திற்கொண்டு, இந்த வீதியை உடனடியாகத் திறந்து தருமாறு இலங்கை அரசாங்கத்திடமும், மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான உயர் அதிகாரிகளிடமும் இப்பகுதி மக்கள் மிகவும் பணிவுடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US