நாட்டின் சட்டத்திற்கு அடிபணியுங்கள் என முஸ்லிம்களிடம் கோரிக்கை
முஸ்லிம்களின் சடலங்களை புதைப்பதா, எரிப்பதா என்றொரு பிரச்சினை எழுந்துள்ளது. இதற்கு பிரதான காரணம் ரவூப் ஹக்கிம் மற்றும் ரிசாட் பதியுதின் ஆகியோரே என சாய்ந்தமருதை பிறப்பிடமாக கொண்ட இசட்டின் என்ற நபர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி செயலகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ரவூப் ஹக்கிம் மற்றும் ரிசாட் பதியுதின் ஆகியோர் தோல்வியுற்ற தலைவர்கள். அவர்கள் இந்த விடயத்தை அரசியலாக்குகிறார்கள்.
மாகாணசபை தேர்தலுக்காக பொன்னம்பலமும், விக்னேஸ்வரனும் சேர்ந்து இதனை அரசியல்மயப்படுத்தி இருக்கிறார்கள்.
எனவே முஸ்லிம்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், நாட்டின் சட்டத்திற்கு அடிபணியுங்கள்.
இதற்கு தேர்ச்சி பெற்ற நிபுணர் குழுவொன்று உள்ளது. அவர்கள் கூறும் வரை பொறுமையாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.