வீதியோர வியாபாரிகள் அமைச்சரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை
வவுனியா நகரப்பகுதியில் வீதியோர வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் தமக்கு பண்டிகைக் காலத்தில் வியாபாரம் மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
வவுனியா பசார் வீதி, இலுப்பையடி, குடியிருப்பு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வீதியோர வியாபார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக நிரந்தர வர்த்தகர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுவதாகவும் நகரசபையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு நகரசபையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த வியாபாரிகள் இது தொடர்பில் நகரசபையிடம் பேசியும் எந்தவித தீர்வும் தமக்கு கிடைக்கவில்லை எனவும், தாம் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், தமது வியாபாரம் தடைப்பட்டால் தமது குடும்பம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தமக்கு பண்டிகைக் காலத்தில் போக்குவரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் வீதியோர வியாபாரத்தில் ஈடுபட அனுமதி பெற்றுத் தர வேண்டும் என மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் கு.திலீபன் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.
அவர்களுடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் வவுனியா நகரசபையுடனும், உரிய
அதிகாரிகளுடனும் பேசி தீர்வினைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்துள்ளனர்.






இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
