ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படும் இளைஞர்களை மீட்க வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோரால் தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கரவெட்டி, முள்ளியவளையைச் சேர்ந்த இளைஞர்களின் பெற்றோரே, ஆளுநர் செயலகத்தில் நேற்று (26) காலை ஆளுநரை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைப்பு
இந்நிலையில், பெற்றோரது கோரிக்கையை செவிமடுத்த ஆளுநர், உடனடியாக வெளிவிவகார அமைச்சின் செயலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
பெற்றோர்களிடம் அவர்களது விவரங்களைப் பெற்று வெளிவிவகார அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
