இலங்கையின் குற்றச்செயல்கள் தொடர்பில் ஐ.நா விடுத்துள்ள கோரிக்கை

United Nations Sri Lanka Easter Attack Sri Lanka
By Sivaa Mayuri Mar 03, 2024 08:23 AM GMT
Report

இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த வகையில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இலக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்; ஆணையாளர் வோல்கர் டர்க், ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான வாய்மொழிப் புதுப்பிப்பின்போது இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் ஆழமான ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதாரத்திற்கான பொறுப்புக்கூறலைக் கோரி வீதியில் இறங்கி போராடினார்கள்.

இலங்கையின் குற்றச்செயல்கள் தொடர்பில் ஐ.நா விடுத்துள்ள கோரிக்கை | Request Made By Un Sri Lanka Criminal Activities

தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் என்பன மிகக் கடுமையான சமூக-பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், நாடு, அதன் அனைத்து சமூகங்களுக்கும் பயனளிக்கும் ஒரு நீண்டகால மாற்றத்தை மேற்கொள்ளும் என்பதில் பெரும் நம்பிக்கை இருந்தது, எனினும் அரசாங்கம் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளபோதும், அடிப்படை உரிமைகள் தொடர்பில் பாதக நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி சுதந்திரங்கள், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக ஆளுகை ஆகியவற்றில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய அல்லது முன்மொழியப்பட்ட சட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளதாக வோல்கர் டர்க் குற்றம் சுமத்தியுள்ளார்.

வீடுகளில் பதுக்கி வைத்துள்ள தங்கத்தை விற்க வேண்டிய நிலையில் இலங்கை அரசியல்வாதிகள்

வீடுகளில் பதுக்கி வைத்துள்ள தங்கத்தை விற்க வேண்டிய நிலையில் இலங்கை அரசியல்வாதிகள்


இலங்கையின் பொருளாதார நெருக்கடி

இதில் இணையப் பாதுகாப்புச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்பு யோசனை, மின்னணு ஊடக ஒலிபரப்பு ஆணைய யோசனை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன மேற்பார்வை மற்றும் பதிவு யோசனை என்பவற்றின் ஊடாக இலங்கை அரசாங்கம் பாதுகாப்புப் படைகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது.

அத்துடன் ஒன்றுகூடல், சங்கம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றிற்கான உரிமைகளை கடுமையாக கட்டுப்படுத்துகிறது, இது குடிமை இடத்தை மட்டுமல்ல, வணிகச் சூழலையும் பாதிக்கிறது என்று ஆணையாளர்குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் பேரழிவுகரமான விளைவுகள் ஆழமாக, குறிப்பாக மிகவும் பின்தங்கியவர்களை தாக்குகின்றன என்றும் வோல்கர் டர்க் கூறியுள்ளார்.

இலங்கையின் குற்றச்செயல்கள் தொடர்பில் ஐ.நா விடுத்துள்ள கோரிக்கை | Request Made By Un Sri Lanka Criminal Activities

கடந்த ஆண்டு வறுமை 27.9 வீதமாக உயர்ந்துள்ளது. மார்ச் 2022 முதல் நாடு முழுவதும் உள்ள குடும்பங்களில் மூன்றில் இரண்டு பங்கின் மாத வருமானம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் உணவு, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் கல்வி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

அரசாங்கத்தின் முயற்சிகள் இருந்தபோதிலும், சமூகப் பாதுகாப்பு மிகைப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. அத்துடன் இந்த ஆண்டு அரசாங்கத்தின் மிகப்பெரிய பாதீடு, நாட்டின் கடனைச் சரிசெய்வதை மட்டுமே குறியாகக் கொண்டுள்ளது.

இந்தநிலையில் மக்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்குனர்கள், நிதி மற்றும் ஆதரவை இலங்கைக்கு வழங்குமாறு ஆணையாளர் கோரியுள்ளார்.

இந்த ஆண்டுடன், இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆயினும்கூட, மனித உரிமை மீறல்கள் கவனிக்கப்படாமல் உள்ளன என்று வோல்கர் டர்க் கூறியுள்ளார். காணாமல் போனவர்களின் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னும் தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன.

இந்த தேடலின்போது அவர்கள் அச்சுறுத்தல்கள், கைதுகள் மற்றும் வன்முறைகளை எதிர்கொள்கின்றனர். நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் காணிப்பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்

அதிகாரப் பகிர்வுக்கான உறுதிமொழியை வழங்கிய மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் என்பன செயலிழந்துள்ளன. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகின்றன என்றும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையையும் நீதியையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவிற்கான சட்ட வரைவை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், நம்பகமான உண்மையைக் கண்டறியும் செயல்முறைக்கான சூழல் நாட்டில் இல்லை.

சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் ஈடுபடுகின்றவர்கள், பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு, துன்புறுத்தல் மற்றும் கைதுகளுக்கு உள்ளாகின்றனர் என்ற முறைப்பாடுகளை தமது அலுவலகம் தொடர்ந்து பெறுகிறது என்றும் வோல்கர் டர்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் குற்றச்செயல்கள் தொடர்பில் ஐ.நா விடுத்துள்ள கோரிக்கை | Request Made By Un Sri Lanka Criminal Activities

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் மீண்டும் மீண்டும் நிகழும், இலங்கை காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் கடத்தல்கள், சட்டவிரோத காவலில் வைத்தல் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் தமது அலுவலகம் ஆழ்ந்த கவலையுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு தனிநபர் ஒருவரை சித்திரவதை செய்தமைக்கு பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் கண்டறிந்த போதிலும், புதிய காவல்துறை அதிபரின் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள், விரிவான பாதுகாப்புத் துறை சீர்திருத்தத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன, உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் இலங்கையில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு தனது அலுவலகம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அத்துடன் குற்றவியல் நீதி விசாரணைகளை மேற்கொள்ளும் பல அதிகார வரம்புகளுக்கு ஆதரவை வழங்கி வருகிறது. அதேநேரம் குறிப்பிட்ட மனித உரிமைகள் தொடர்பான சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆதாரங்களை ஆழப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலவந்தமாக காணாமல் போதல் தொடர்பான ஆய்வுகளையும் பாதிக்கப்பட்டவர்களுடன் ஆலோசனைகளையும் தமது அலுவலகம் மேற்கொண்டு வருவதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி


இந்தநிலையில் பிற்போக்கான சட்டங்கள் மற்றும் எதேச்சாதிகார அணுகுமுறைகளால் இலங்கையில் நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும், இது கடந்த கால மனித உரிமைகள் தொடர்பில் அதிருப்திகளை ஏற்படுத்துவதற்கு மட்டுமே உதவும் என்றும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தப் போக்கை மாற்றியமைத்து, கடந்த கால மற்றும் தற்போதைய மனித உரிமை மீறல்கள் மற்றும் பொருளாதாரக் குற்றங்களை விசாரித்து, வழக்குத் தொடர நம்பகமான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தாம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஆணையாளர் கோரியுள்ளார்.

அதேநேரம் உலகளாவிய மற்றும் எல்லைக்கு அப்பாற்பட்ட அதிகார வரம்பை சரியான முறையில் பயன்படுத்தி, தீவிரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் என நம்பத்தகுந்த வகையில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிரான இலக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று தாம் பேரவையின் உறுப்பு நாடுகளை கேட்டுக்கொள்வதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் பசில் இல்லை! நாமலுக்கு தகுதி இல்லை

ஜனாதிபதி வேட்பாளர் பசில் இல்லை! நாமலுக்கு தகுதி இல்லை


2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, London, United Kingdom

20 Nov, 2024
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

26 Nov, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Toronto, Canada

26 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

29 Nov, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், Oberhausen, Germany, Essen, Germany, Hanau, Germany

26 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், கனடா, Canada

29 Nov, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சூராவத்தை, London, United Kingdom

26 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, கந்தர்மடம், London, United Kingdom

27 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Recklinghausen, Germany, Harrow, United Kingdom

26 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Colombes, France

23 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
17ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, கரணவாய் மேற்கு

09 Dec, 2007
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், உருத்திரபுரம், கிளிநொச்சி, சுவிஸ், Switzerland

29 Nov, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Nov, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Toronto, Canada

09 Dec, 2022
மரண அறிவித்தல்

தாவடி, Scarborough, Canada

23 Nov, 2024
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு, Herning, Denmark

26 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனுராதபுரம், பண்டாரிக்குளம், London, United Kingdom

10 Dec, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Aarau, Switzerland

25 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, வவுனியா, பலெர்மோ, Italy

02 Dec, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

26 Nov, 2024
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Vigneux-sur-Seine, France

24 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திரியாய், தண்ணீரூற்று, முருகாபுரி, Pickering, Canada

24 Nov, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
மரண அறிவித்தல்

யாழ் நவாலி தெற்கு, Jaffna, பரிஸ், France, மெல்போன், Australia

21 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Liverpool, United Kingdom

27 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், கற்சிலைமடு, Dartford, United Kingdom

01 Dec, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று வடக்கு

23 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US