கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி

Jaffna Rajiv Gandhi Sri Lanka India
By Dhayani Mar 03, 2024 04:23 PM GMT
Report

புதிய இணைப்பு

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருக்கும் சாந்தனின் ஊர்தி பவனி நெல்லியடி பேருந்து நிலையத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றும் பெருமளவிலான மக்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி | Santhan Dies In Chennai Hospital

இதனைத் தொடர்ந்து  சாந்தனின் ஊர்தி பவனி வல்வெட்டித்துறை - தீருவில் நோக்கி பொதுமக்களின்  அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படவுள்ளதுடன் மாலை 05 மணி அல்லது 06 மணியளவில்  சாந்தனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி | Santhan Dies In Chennai Hospital

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி | Santhan Dies In Chennai Hospital

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி | Santhan Dies In Chennai Hospital

நான்காம் இணைப்பு

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருக்கும் சாந்தனின் ஊர்தி பவனிக்கு கொடிகாமத்தில் அஞ்சலி  செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது கிளிநொச்சியில் பெருமளவிலான மக்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி | Santhan Dies In Chennai Hospital

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி | Santhan Dies In Chennai Hospital

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி | Santhan Dies In Chennai Hospital

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி | Santhan Dies In Chennai Hospital

மூன்றாம் இணைப்பு

சாந்தனுக்கு கிளிநொச்சியில் பெருமளவிலான மக்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கிளிநொச்சி நகர டீப்போ சந்தியில் கறுப்புக் கொடிகள் கட்டி பந்தல்கள் அமைக்கப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் அரசியில் பிரமுகர்கள் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு உணர்வுபூர்வ அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.

சிவஞானம் சிறிதரன் அஞ்சலி

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி | Santhan Dies In Chennai Hospital

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி | Santhan Dies In Chennai Hospital

வவுனியாவில் இருந்து ஏ-09 வீதி வழியாக எடுத்து வரப்பட்ட சாந்தனின் ஊர்தி 03.03.2024, ஞாயிற்றுக்கிழமை மு.ப 11.00 மணிக்கு, கிளிநொச்சி டிப்போச்சந்திக்கு அருகில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி | Santhan Dies In Chennai Hospital

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி | Santhan Dies In Chennai Hospital

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி | Santhan Dies In Chennai Hospital

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி | Santhan Dies In Chennai Hospital

செய்தி - யது

இரண்டாம் இணைப்பு

சாந்தனின் பூதவுடலுக்கு வவுனியா உள்ளிட்ட தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. 

சாந்தனின் ஊர்திக்கு மாங்குளத்தில் மக்கள் அஞ்சலி கிளிநொச்சி நோக்கி தொடர்ந்து பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முதலாம் இணைப்பு

இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இன்று யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்லப்படுகின்றது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும்,பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு மாங்குளத்திலும், காலை 10.30 இற்கு கிளிநொச்சியிலும் தொடர்ந்து 11.30 இற்கு இத்தாவில் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,கொடிகாமம் ஊடாக பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு பிற்பகல் 2 மணிமுதல் வல்வெட்டித்துறை தீருவிலில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாங்குளம்

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி | Santhan Dies In Chennai Hospital

இறுதிக்கிரியை

மேலும், இன்றைய தினம் சாந்தனின் புகழுடல் காலை 8:00 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள அதே வேளையில் தொடர்ந்து காலை 9:00 மணிக்கு மாங்குளத்திலும் காலை 10:30 ற்கு கிளிநொச்சியிலும் அதனைத்தொடர்ந்து கொடிகாமம் ஊடாக புகழுடல் எடுத்துச்செல்லப்பட்டு பிற்பகல் 2: 00 மணி தொடக்கம் 3:00 மணி வரை வல்வெட்டித்துறை தீருவிலில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் என ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நாளைய தினம் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்த்து அனைத்து இடங்களிலும் கறுப்புக்கொடிகளை கட்டி தமிழ்த்தேசிய துக்கநாளாக அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சாந்தனின் இறுதிக்கிரியை (திங்கட்கிழமை) நாளை காலை 10 மணிக்கு அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டியில் நடைபெறவுள்ளது. 

இந்த இறுதி கிரியையில் உறவினர்கள் ஊர் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு இடமளிக்குமாறு குடும்பத்தார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

புதுக்குடியிருப்பு

மேலும், சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுக்குடியிருப்பில், பல்வேறு இடங்களிலும் அஞ்சலிப் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொதுசந்தை வளாகத்திற்கு முன்பாக, புதுக்குடியிருப்பு நகர்பகுதி போன்ற பகுதிகளில் சாந்தனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் பதாதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், தாயக செயலணி என்ற அமைப்பினர் தமது அஞ்சலிகளை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளனர். சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலிப் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன. 

செய்தி - ஷான் மற்றும் ராகேஷ்

சாந்தனின் இறுதி சடங்கு தொடர்பான அறிவித்தல் வெளியானது

சாந்தனின் இறுதி சடங்கு தொடர்பான அறிவித்தல் வெளியானது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பத்தமேனி, மட்டக்களப்பு, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்லின், Germany

21 Jul, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Ashford, United Kingdom

04 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

08 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US