விகாரையின் பிரதமகுரு பொதுமக்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு(Videos)
வரலாற்றுச் சிறப்புமிக்க ரம்புக்கனை தளிவல விஹாரையில் தங்கக் கலசம் உட்பட ஒன்பது பெட்டிகள் திருடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் சரியான தகவலை வழங்குபவருக்கு 10 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்படும் என விகாரையின் பிரதமகுரு புஸ்ஸல்லா ஆரியவன்ச தேரர் பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் வெண்கல கலசங்கள், ஊதா மற்றும் வெள்ளை படிக பெட்டிகள் இரண்டு, நினைவுச்சின்னங்களைக் கொண்ட ஒரு பளிங்கு பெட்டி, தங்கச் சுவடுகள் ஐந்து, பெட்டியிலுள்ள ஒரு கலசம் ஆகியவை 11ஆம் திகதி இரவு திருடப்பட்டுள்ளன.
இவை திருடப்பட்டு இன்றோடு ஐந்து நாட்கள் கடந்துள்ளன. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,



