அதிகாரிகள் மற்றும் அரசிடம் சுமந்திரன் விடுத்துள்ள கோரிக்கை
கடந்த 27ம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் இலங்கை இராணுவத்தினரால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குறியதும் மிகவும் கீழ்தரமானதுமொன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும்,
குறித்த தினத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் தனது பணியினை செய்து கொண்டிருந்த வேளை இராணுவத்தினர் அடையாளத்தினை உறுதிப்படுத்த கேட்டுக் கொண்டதையடுத்து தனது அடையாள அட்டையினை காண்பிக்க முற்பட்ட வேளையே தாக்கப்பட்டதாக அறிகின்றோம்.
இந்த தாக்குதலை மேற்கொண்ட இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டதும் வெறுமனே ஒரு கண் துடைப்பு சம்பவமாகவே நாம் காண்கிறோம்.
இந்த விடயம் தொடர்பாக எமது கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதோடு இது தொடர்பாக சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நியாயம் கிடைக்க வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் உரிய அதிகாரிகள் மற்றும் அரசிடம் நாம் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறான சம்பவங்கள் ஊடக துறைக்கு பெரும் சவாலாக அமைகின்றது. அண்மைக்காலங்களில் பல்வேறு தரப்பினருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் போலவே குறித்த இந்த சம்பவமும் தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதாகவும் அவர்களது ஊடக சுதந்திரத்தினை பறிப்பதாகவும் அமைகின்றது.
தொடர்ச்சியாக நடைபெறும் இவ்வாறான விடயங்கள் குறித்து நாம் தொடர்ந்தும் அவதானமாக இருந்து பாதிக்கப்படுவோருக்காக எப்போதும் நாம் குரல் கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri