தேசிய பல் வைத்தியசாலை விடுத்துள்ள கோரிக்கை
அவசியமான பல் தொடர்பான உபாதை தவிர வேறு சிறிய பிரச்சினைகளுக்காக தற்போதைய சந்தர்ப்பத்தில் தேசிய பல் வைத்திய போதனா வைத்தியசாலைக்கு வர வேண்டாம் என அந்த வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் மிகார ஹேபா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் வைத்தியசாலைக்கு வரும் அனைவரும் சுகாதார வழிக்காட்டல்களை மதித்து செயற்பட வேண்டும் எனவும் வைத்தியசாலை வீணாக காலத்தை கழிக்காது உடனடியாக வீடுகளுக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பல் சிகிச்சை செய்யும் போது தெறிக்கும் எச்சில் மூலம் கோவிட் பரவும் ஆபத்து இருப்பதால், இந்த நடவடிக்கையை எடுக்க நேரிட்டுள்ளது எனவும் ஹேபா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சத்திர சிகிச்சை செய்துக்கொள்ள வரும் நோயாளிகள் பீ.சி.ஆர் பரிசோதனையின் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri