பிள்ளைகளை எம்மிடம் ஒப்படையுங்கள்! பெற்றோரிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
பிள்ளைகள் சுமையாகத் தெரிந்தால் அவர்களை கொல்ல வேண்டாம் எனவும், அருகாமையில் உள்ள பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸார் பெற்றோரிடம் கோரியுள்ளனர்.
பிள்ளைகளை வளர்க்க முடியாத நெருக்கடி நிலைமை காணப்பட்டால் அவர்களை கொன்றுவிட வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
களனி ஆற்றில் 5 வயது குழந்தையை எறிந்த பெண் வழங்கியுள்ள வாக்குமூலம் |
பிள்ளைகளை வளர்ப்பதில் சிரமங்கள் காணப்பட்டால் அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் பிள்ளைகளை ஒப்படைக்குமாறு கோரியுள்ளார்.
இவ்வாறு ஒப்படைத்தால் பெற்றோருக்கு பொலிஸார் உதவுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
களனி ஆற்றில் 5 வயது குழந்தையை வீசிய தாய்! மகன் வழங்கியுள்ள வாக்குமூலம் |
களனி ஆற்றில் வீசப்பட்ட பிள்ளை
நேற்று முன்தினம் களனி பிரதேசத்தில் தாய் ஒருவர் ஐந்து வயதான பிள்ளையை களனி ஆற்றில் வீசி வீட்டு தாமும் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்திருந்தார்.
அயலவர்கள் குறித்த பெண்ணை காப்பாற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
