தையிட்டி விகாரை காணிகளை பொதுமக்களிடம் கையளியுங்கள்! தேரர் வலியுறுத்து
சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண நாக விகாரையின் விகாராதிபதி விமலதர்ம தேரர் தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட காணொளியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கத்திடம் கோரிக்கை
தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணிகள் பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த சமயத்தில் சட்ட நீதி அமைச்சுக்களோ அல்லது ஜனாபதியோ யார் கூறினாலும், பொது மக்களுடைய காணிகள் அவர்களுக்கு உரியவையாகும்.

இந்த விடயத்தை சிங்களவர்களும், தமிழர்களும் அரசியலுக்குள் கொண்டு செல்ல வேண்டாம். ஏனெனில் மக்களுக்கும் நிதி பிரச்சினை போன்ற வேறு வேறு பிரச்சினைகள் உள்ளன.
நான் ஏற்கனவே கூறியது போன்று பொது மக்களின் காணிகள் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.