மட்டக்களப்பில் ஆசிரியர் நியமனம் குறித்த வேண்டுகோள்: வியாழேந்திரன்(Photos)
தற்போது வழங்கப்பட இருக்கும் கல்வியியல் கல்லூரி ஆசிரிய நியமனங்களில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியர்களை அதே மாவட்டத்திற்கு ஆசிரியர்களாக நியமிக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தாமதிக்காது நியமனம் வழங்க வேண்டும்
இந்த விடயம் சம்பந்தப்பட்ட விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டதோடு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன்.
B.E.D பட்டதாரிகளுக்கு ஏனைய மாகாணங்களில் நியமனம் வழங்கப்பட்ட நிலையில் கிழக்கு மாகாணத்தில் B.E.D பட்டப்படிப்பை முடித்து இதுவரை நியமனம் வழங்கப்படாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கான நியமனங்களை தாமதிக்காது வழங்க வழி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.










விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

புடினை சந்திப்பதற்கு முன் பாதுகாப்பு உத்தரவாதத்தை கேட்கும் ஜெலென்ஸ்கி! இடம் இதுவாக இருக்கலாம் News Lankasri
