வடக்கு மாகாணத்தில் சுகாதார தொண்டர்களுக்கு நியமனம் வழங்குமாறு கோரிக்கை
சுகாதார தொண்டர்களுக்கு இரத்து செய்யப்பட்ட நியமனத்தை மீண்டும் வழங்குமாறு வடக்கு மாகாண ஜனசவிய சுகாதார சேவைகள் சங்க செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடமராட்சியில் நேற்று(20.12.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“நீண்டகாலமாக தொண்டர்களாக பணியாற்றியவர்களுக்கு 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் வழங்கப்பட்ட நியமனம் அரசால் மறுநாளே நிறுத்தப்பட்டிருந்தது. சிற்றூழியர்களுக்கான அந்த நியமனத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெருக்கடி நிலை
வடக்கு மாகாணத்தில் அதிகளவான சிற்றூழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. புதிய பிரிவுகளை நிறுவியுள்ளதால் அதற்கான ஆளனி வெற்றிடங்கள் நிலவி வருகின்றது.
இருக்கின்ற ஆளணிகளும் ஓய்வில்லாது வேலை செல்வதால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை மாண்புமிகு ஜனாதிபதி கருத்தில் கொண்டு வழங்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட நியமனங்களை மீண்டும் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |