தோட்ட முகாமையாளர்களின் அடாவடித்தனங்களை ஒடுக்க தொழிற்சங்கங்கள் ஒன்றிணைய வேண்டும்! கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் விளாசல்

Nuwara Eliya Sri Lanka Sri Lankan Peoples
By Malaivanjan Oct 04, 2026 04:47 AM GMT
Report

பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களுக்கு எதிரானதாகக் கூறப்படும் வன்முறைகள், ஒடுக்குமுறைகள், அழுத்தங்கள் மற்றும் வேலைப்பளுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தொழிலாளர் முன்னணியின் செயலாளரும், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினருமான புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலை காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மன உளைச்சலுக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் நேற்றைய தினம் (03.10.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சகல தொழிற்சங்கங்களும் இன, மத மற்றும் கட்சி பேதங்களை கடந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தொழிலாளர்களுக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், தற்போது வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளிலும் வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன் குறித்த நாட்களில் பணியாற்ற வேண்டுமாயின் கைகாசு அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என சில தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் தொழிலாளர்களுக்காக செலுத்தப்பட வேண்டிய EPF மற்றும் ETF உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகள் மற்றும் அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட 200 ரூபாய் கொடுப்பனவு ஆகியவற்றைத் தவிர்க்கும் நிலை ஏற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தோட்ட முகாமையாளர்களின் அடாவடித்தனங்களை ஒடுக்க தொழிற்சங்கங்கள் ஒன்றிணைய வேண்டும்! கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் விளாசல் | Request By Pushpa Kotagala Pradeshiya Sabha

அச்சத்துடன் பணியாற்றும் பணியாளர்கள்

மேலும் பல தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் காடுகளாக மாறியுள்ள நிலையில் புலி, சிறுத்தை மற்றும் பாம்பு உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டத்தால் தொழிலாளர்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தோட்டப் பகுதிகள் தனியாருக்கு பிரித்துக் கொடுக்கப்படுவதன் மூலம் தோட்டங்கள் துண்டாடப்பட்டு தொழிலாளர்களின் உரிமைகளும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இவ்வாறான பிரச்சினைகள் ஒரு சில தோட்டங்களில் மாத்திரமன்றி பல தோட்டங்களில் பரவலாக இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும், அரசாங்கம் தொழிலாளர் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

மேலும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக எந்தவொரு தொழிற்சங்கமாவது முன்வந்து போராட்டத்தை முன்னெடுத்தால் தமது முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் கைது! நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் கைது! நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

இலங்கை கடற்பரப்பில் குவிந்துள்ள ஈரானிய கப்பல்கள்! இலங்கைக்கு மறைமுகமாக காத்திருக்கும் பாரிய சிக்கல்

இலங்கை கடற்பரப்பில் குவிந்துள்ள ஈரானிய கப்பல்கள்! இலங்கைக்கு மறைமுகமாக காத்திருக்கும் பாரிய சிக்கல்

6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US